மோடி திரும்ப வந்தா நம்மை வெளிநாட்டில வித்திடுவாரு.. . சீறும் செல்வப்பெருந்தகை!

 
செல்வப்பெருந்தகை

திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியினுடைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார் – பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது...


இந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மக்கள் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் என்பதை உறுதி செய்யும் மேலும் பிரித்தாலும் கொள்கையை கையாளக்கூடிய பாஜகவை எதிர்க்கும் தேர்தலாகவும் இது அமையும். இந்த மண் சமூக விடுதலைக்கான மண் - சமூக நீதிக்கான மண். உள்நாட்டு மக்களை வெளிநாட்டில் விற்பது, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்ற நாட்டிற்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். எனவே ஒரு போதும் இந்த தேர்தலில் இந்திய மக்கள் இப்படிப்பட்ட பாசிச சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள்.

 

செல்வப்பெருந்தகை


ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது அதேபோல் ஒவ்வொருவருக்கும் இந்த தேசத்தின் மீதான பார்வை என்பது வேறு, வாஜ்பையை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தந்தையாகவும் குருவாகவும் தேசத்தின் பாஜகவின் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள். மோடி ஏற்றுக் கொண்ட தலைவரான வாஜ்பாய் கூறுகையில் உலகத்தின் இரும்பு மனுஷன் என்று போற்றப்பட்ட இந்திரா காந்தியை துர்கா தேவி என்று கூறினார் . துர்கா தேவிக்கு என்ன சக்தி இருக்கிறதோ ஆளுமை இருக்கிறதோ அந்த சக்தியும் ஆளுமையும் இந்திரா காந்திக்கு இருப்பதாக கூறினார் அப்படி என்றால் தலைவர் வாஜ்பாய் சொன்னது தவறா அல்லது மோடி சொன்னது சரியா இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து செயல்பட்டவர் அன்னை இந்திரா காந்தி. கட்ச தீவை குறித்து பேசுபவர்கள் வெஜ் பேங்கை குறித்து ஏன் பேசவில்லை ஏன் மறைக்க வேண்டும். வெஜ் பேங்க் என்பது என்ன அதை எதற்காக இந்திரா காந்தி இந்திய கடல் எல்லையில் கொண்டு சேர்த்தார் வெஜ் பேங்க் என்ற பகுதியில் என்ன என்ன அபூர்வங்கள் கனிம வளங்கள் உள்ளது என்பது குறித்து இதுவரை மோடி பேசவில்லை.

 

எத்தனையோ விஞ்ஞானிகள் கடல் ஆராய்ச்சியாளர்கள் இருந்தாலும் வெஜ் பேங்க் குறித்து இதுவரை மோடி பேசாமல் மௌனம் சாதிக்கிறார் ஆனால் ஒன்றுமில்லாத கச்சத்தீவை குறித்து மற்றும் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவினுடைய எல்லையை விரிவு படுத்தவும் வெஜ் பேங்க் மூலம் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள். ஏழு லட்சம் தொப்புள் கொடி தமிழ் உறவுகள் அப்பகுதியில் வாழ்ந்த வருகின்றனர் எனவே அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் தற்போது கட்சி தொடர்பான பிரச்சினையை இந்த மோடி கையாண்டு வருகிறார். கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் கட்டாயம் வெஜ் பேங்க் குறித்தும் பேச வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு!

தற்போது எம்.பி யாக இருக்கக்கூடிய திருநாவுக்கரசர் ஒரு நல்ல மனிதர் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது ஆனால் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் எனவே அவர் தொடர்ந்து தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி விரைவில் ஈடுபடுவார் என்று தெரிவித்தார். காங்கிரஸ் சார்பில் இன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ ஆதரித்து வாக்கு கேட்பதற்காகவும் அடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பதற்காகவும் இன்று நான் வந்துள்ளேன்.. எங்களுடைய ஒரே இலக்கு இந்தியா கூட்டணி என்பது வெல்ல வேண்டும் என்பதுதான் இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் பல சங்கடங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் களைந்து இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்றார். ஏற்கனவே நடந்த தேர்தல்களில் நாங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னதில்லை இப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை…என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web