தமிழிசை சௌந்திரராஜனின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

 
தமிழிசை சௌந்திரராஜன்  திரௌபதி முர்மு

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்திரராஜன்,

தமிழிசை சௌந்திரராஜன்  திரௌபதி முர்மு

இந்த இருமாநிலங்களையும் இரட்டைக் குழந்தைகள் போல் பராமரிப்பேன் என பதவியேற்பு விழாவில் கூறியிருந்தார். இரு மாநிலங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு சிறப்பித்து திறம் பட செயலாற்றி வந்த தமிழிசை செளந்தரராஜன், ஏற்கெனவே இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியை தழுவியிருந்தார்.

திரௌபதி முர்மு


இந்நிலையில் நேற்று தனது ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் தமிழிசை. வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தான் போட்டியிடுவேன் என்று பேட்டியளித்திருந்தார் தமிழிசை செளந்தரராஜன்.இந்நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web