கணேசமூர்த்தி... வேண்டா வெறுப்பா திமுக உறுப்பினரானார்... கதறிய வைகோ... கண்ணீர் மல்க பேட்டி!

 
vaiko
 

 உதயசூரியன் சின்னத்துல போட்டியிடுவதற்காக வேண்டா வெறுப்பாக திமுக உறுப்பினரானார் கணேசமூர்த்தி. இப்போ திமுக உறுப்பினரானதால வேறு பொறுப்பிற்கு வரமுடியாது என்று கூறி வருத்தப்பட்டவரிடம் சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என்றேன். அப்போது இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்றார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். தேர்தல் முடிந்த பின்பும் இருவரும் வீடுகளுக்கு சென்று வந்திருக்கின்றோம். உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம் நானும் கணேசமூர்த்தியும்” என்று கண்ணீர் மல்க, இன்று கோவை வந்திருந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். 

vaiko
மதிமுகவின் பொருளாளராக பதவி வகித்து வந்த கணேசமூர்த்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் மருந்து குடித்ததாக கூறப்பட்டது. 

ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி
உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை 5.15 மணிக்கு காலமானார்.   இதையடுத்து, அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
“இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர். இந்த முடிவிற்கு வருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்ததை போல இருக்கின்றது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை விட, மருந்து குடித்து விட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று கண்ணீர் விட்டு நா தழுதழுக்க அழுதார் வைகோ. தொடர்ந்து பேசியவர், “மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது. எம்.பி சீட் கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மையல்ல”  என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web