காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு!

 
வீரப்ப மொய்லி

 இந்தியா முழுவதும் தேர்தல் ஜூரம் தொடங்கி விட்டது. 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வீரப்ப மொய்லி

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி. 82 வயதான வீரப்ப மொய்லி மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். 6 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அமைச்சராக பணிபுரிந்தவர். இவர்  2009 மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் சிக்கபள்ளாபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யானார்.  2019 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். இம்முறையும் அதே தொகுதியில் சீட் கேட்டதில்   காங்கிரஸ் கட்சி மேலிடம் சீட் வழங்க மறுத்துவிட்டது.

காங்கிரஸ்

இந்நிலையில், தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.  இது குறித்து வீரப்ப மொய்லி  “சிக்கபள்ளாபூர் தொகுதியில் போட்டியிட்டிருந்தால் இம்முறை கண்டிப்பாக நான் தான் ஜெயித்திருப்பேன். எனக்கு சிக்கபள்ளாபூர் தொகுதியில் போட்டியிட  மேலிடம் அனுமதி மறுத்ததில்  எந்த வருத்தமும் இல்லை. கட்சி தலைமையின் முடிவுக்கு நான் எப்போதுமே கட்டுப்பட்டவன்.  என்னை ஒரு பதவி ஆசை பிடித்தவனாக மக்கள் மத்தியில் காட்ட நான் விரும்பவில்லை. தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து நான் கட்சிக்காக  உழைப்பேன் எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web