200 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி சட்டம்... விடுதலை சிறுத்தை தேர்தல் அறிக்கை!

 
விடுதலை சிறுத்தைகள்

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. நாம் தமிழர் தனித்து நின்று போட்டியிடுகிறது.

விடுதலை சிறுத்தைகள்

இந்நிலையில்  இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அக்கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை  எதிர்ப்போம், ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது,

 

அம்பேத்கர் பிறந்தநாளை 'அறிவுத் திருநாளாக' அங்கீகரிக்க நடவடிக்கை உள்ளிட்டவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம்  பிடித்துள்ளன.சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.பாஜகவிற்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும்.
பாஜக அரசை வீழ்த்தவது தான் ஒன்றை இலக்கு‌  
ராமர் கோயில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை 
கச்சத்தீவு மீட்பு 
தேர்தல் ஆணையர் நியமண சட்டம் ரத்து
வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை
தொகுதிமறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு 
இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம் 
வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல் 
200 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி சட்டம்

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு
விவசாயத்திற்கு தனி பட்ஜெட் 
பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை 
தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி 
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல் 
அமைச்சரவையிலும் மேலவைகளிலும் இட ஒதுக்கீடு 
ஆவணக் கொலை தடுக்க தனிச் சட்டம்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web