மோடிக்கு ஓட்டு போடுங்க... வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

 
மோடி

 இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைட் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவிற்கு பின் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில் தேர்தல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என சுழன்றடித்து பணிகளில் மும்மூரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், தெலங்கானாவில் வசித்து வரும் பாஜக அபிமானி ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கான  திருமண அழைப்பிதழில், திருமணத்துக்கு யாரும் பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம். தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என  அச்சிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த திருமணப் பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

பாஜக


தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் வசித்து வருபவர்  நந்திகண்டி நரசிம்முலு. இவரது மகன் சாய் குமாருக்கும், மஹிமாராணிக்கும் ஏப்ரல் 4ம் தேதி  திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக திருமண அழைப்பிதழ்கள் மணமகன் வீட்டு சார்பில் அச்சிடப்பட்டது. அதில், அழைப்பிதழின் மேல் அட்டையில்  மோடியின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த திருமண அழைப்பிதழில், "பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே இந்த திருமணத்திற்கு நீங்கள் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு. எங்களுக்கு வேறு பரிசுகள் எதுவுமே  வேண்டாம்" என எழுதப்பட்டுள்ளது. இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக


பத்திரிகையை அச்சடித்த நந்திகண்டி நரசிம்முலு  ''நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். பிரதமர் மோடிக்கு எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூற வேண்டும். இதற்கான துருப்புச்சீட்டாக  எனது மகனின் திருமண விழாவினை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதன்படி, திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என அச்சிட்டுள்ளேன்” என விளக்கம் அளித்துள்ளார்.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web