ஜெயில் கட்டுனதே எங்களுக்கு தான் தம்பி... அண்ணாமலைக்கு சவால் விடும் செல்லூர் ராஜு !
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ இன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எங்களுக்கு எப்பவுமே மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. அமலாக்கத் துறை குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. சிறையே எங்களுக்காக தான் கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் வாய்ப்பூட்டு சட்டமே எங்களுக்காக தான் கொண்டு வந்தான்.
அழகிரிக்கு எதிராக அரசியல் செய்தவன் நான் . தற்போது அழகிரி ஆதரவாளர்கள் பசை இருக்கும் இடத்தை தேடி சென்று விட்டார்கள். இதுக்கெல்லாம் அச்சப்படமாட்டேன். "கச்சத்தீவை தாரைவார்த்தது குறித்து ஆர்.டி.ஐ., மூலமாக கண்டறிந்ததாக அண்ணாமலை தெரிவிக்கிறார். கச்சத்தீவு குறித்து அம்மா 2006ம் ஆண்டே ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்வேறு எதிர்ப்புகளை முன்னெடுத்தார். இதற்கு கலைஞர் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் நபர்களை பூ போட்டா வரவேற்பார்கள்? துப்பாக்கி வைத்து தான் சுடுவார்கள் என கொச்சையாக பேசியதும் அன்றைய நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வந்தது. வசதியாக எல்லாவற்றையும் மறைத்து மறந்து பேசக்கூடாது.
20000 புத்தகம் படித்த அண்ணாமலை இதையெல்லாம் ஏன் படிக்காமல் விட்டார். கச்சத்தீவை கலைஞர் 1974-ல் தாரைவார்த்தார். இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை ஆர்.டி.ஐ.,மூலம் தெரிந்து கொண்டேன் என்கிறார். மீனவர்கள் பாதிப்பு குறித்து தெரியாமல் இருந்துள்ளார். எந்த வண்டி டெல்லிக்கு போகும், எந்த வண்டி டெல்லிக்கு போகாது என மக்கள் தான் தீர்ப்பு அளிப்பார்கள். எந்த வண்டி டெல்லிக்கு போகும் என தேர்தலின் போது மக்கள் முடிவு செய்வார்கள் என காரசாரமாக பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!