இந்த தேர்தலில் ‘பம்பரமா’ சுற்றுமா? இன்று விசாரணைக்கு வருகிறது மதிமுக சின்னம் தொடர்பான வழக்கு!

 
வைகோ

இந்த தேர்தலில் பம்பரம் சுற்றுமா என்பது மதிமுக போட்டியிடப் போகும் சின்னத்தைப் பொறுத்து தான் என்கிறார்கள். உயிரே போனாலும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று துரை வைகோ பேசியதை யாரும் பெரிதாக ரசிக்காத நிலையில், பம்பரம் சின்னம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2006ல் சட்டமன்றத் தேர்தலில் 5.98 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றதால், மதிமுகவின் கட்சி அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. கடந்த 2014 ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. 

பம்பரம் சின்னம்

பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தைக் கோரவில்லை என்பதாலும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதாலும், தங்கள் மனுவைப் பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 1ம் தேதி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மதிமுக அளித்த மனுவை பரிசீலித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

வைகோ

இதுவரை தேர்தல் ஆணையம் சின்னம் குறித்து எந்த தகவலையும் மதிமுகவுக்கு தெரிவிக்காததால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வது நாளையுடன் முடிவடைகிறது. இன்னும் தங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என அவசர முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர முறையீட்டு மனுவை இன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web