கோலாகலமாக நிறைவு பெற்ற 16வது பாராஒலிம்பிக்

 
கோலாகலமாக நிறைவு பெற்ற 16வது பாராஒலிம்பிக்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கி போட்டியில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர்.

இந்நிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பி போட்டியின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் காட்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுத்து வந்தன.

கோலாகலமாக நிறைவு பெற்ற 16வது பாராஒலிம்பிக்

நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லெஹரா தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா 24-வது இடம் பிடித்தது.

From around the web