தலையில் அடிபட்டதால் நினைவாற்றலை இழந்த டூப்ளசிஸ் !

 
தலையில் அடிபட்டதால் நினைவாற்றலை இழந்த டூப்ளசிஸ் !


பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – பெஷாவர் ஷால்மி ஆகிய அணிகள் மோதியதில் டேவிட் மில்லர் அடித்த பந்தை தடுப்பதற்காக டூப்ளசிஸ் ஓடினார்.


அப்போது எதிரே சக வீரர் முகமது ஹஸ்னைன் ஓடிவந்தார். அப்போது டூப்ளசிஸ் தலை ஹஸ்னைன் காலில் மோதியது. இதனையடுத்து டூப்ளசிஸ் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் அடிபட்டதால் நினைவாற்றலை இழந்த டூப்ளசிஸ் !


அதாவது, சிறிது நேரம் மைதானத்தில் அமரவைக்கப்பட்ட டூப்ளசிஸ், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.


இதனிடையே தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து ட்விட்டரில் டூப்ளசிஸ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மெசேஜ் அனுப்பி ஆதரவைக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றி. தற்போது ஹோட்டலில் ஓய்வு எடுத்து வருகிறேன். சிறிதளவு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது/ ஆனால் விரைவில் நான் சரியாகி விடுவேன். சரியானதும் களத்துக்கு திரும்புவேன் என நம்புகிறேன்” என அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டூப்ளசிஸ்க்கு நேர்ந்த இந்த எதிர்பாராதவிதமான காயம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டூப்ளசிஸ் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web