44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து பெண் எம்மா ராடுகானு

 
44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து பெண் எம்மா ராடுகானு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர்.

இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி ராடுகானு வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதன் மூலம் 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

From around the web