மும்பை டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா! தரவரிசையில் மீண்டும் முதலிடம்!

 
மும்பை டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா! தரவரிசையில் மீண்டும் முதலிடம்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மும்பை டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா! தரவரிசையில் மீண்டும் முதலிடம்!

இந்தியா- நியூசிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.பின்னர் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களில் ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் அஸ்வின் 4, முகமது சிராஜ் 3, அக்சார் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மும்பை டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா! தரவரிசையில் மீண்டும் முதலிடம்!

263 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது. போட்டியின் 3-வது நாளான நேற்று மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். புஜாரா 47 ரன்களும், ஷுப்மான் கில் 47 ரன்களும், விராட் கோலி 36 ரன்களும் சேர்த்தனர். அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 41 ரன்கள விளாச, இந்தயா 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டும், ரவீந்திரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மும்பை டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா! தரவரிசையில் மீண்டும் முதலிடம்!

540 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று காலை ஆட்டம் தொடங்கியதிலிருந்து ரன்கள் எடுக்க தடுமாறிய நியூஸிலாந்து அணி 167 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் அஷ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணியை நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்து, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும், உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையிலும் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

From around the web