ஆசிய சாம்பின்ஸ் கோப்பை: தாய்லாந்தை துவம்சம் செய்த இந்தியா!

 
ஆசிய சாம்பின்ஸ் கோப்பை: தாய்லாந்தை துவம்சம் செய்த இந்தியா!

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை முதல் லீக் போட்டியில், தாய்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய சாம்பின்ஸ் கோப்பை: தாய்லாந்தை துவம்சம் செய்த இந்தியா!

தென்கொரியா, டாங்கே நகரில் 6-வது மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தென்கொரியா, இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து என ஆசியாவின் டாப் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், இந்திய அணி தாய்லாந்து அணியுடன் மோதியது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய மகளிர் அணியினர் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குர்ஜித் கவுர் 5 கோல்களை அடித்து அசத்தினர். விடாமல் கோல் மழை பொழிந்த இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.

ஆசிய சாம்பின்ஸ் கோப்பை: தாய்லாந்தை துவம்சம் செய்த இந்தியா!

அதேபோல், மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜப்பான், தென்கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்று நடைபெறவிருந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, மலேசியாவுடன் மோதவிருந்த சூழலில், மலேசிய வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மலேசிய அணி விளையாட வேண்டிய போட்டிகளை வேறு தேதிகளுக்கு ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் வருகிற 8 ஆம் தேதி நடைபெறவுள்ள லீக் போட்டியில் இந்தியா, தென்கொரியாவை எதிர்கொள்கிறது.

From around the web