இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இன்று முதலாவது ஒரு நாள் போட்டி

 
இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இன்று முதலாவது ஒரு நாள் போட்டி

இந்தியா-இலங்கை இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூலை 13ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. அதேபோல், இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இலங்கை அணியும் தாயகம் திரும்பியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இலங்கை அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13க்கு பதில் ஜூலை 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

From around the web