உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி! வெண்கலப் பதக்கமும் பறிப்போனது!

 
உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி! வெண்கலப் பதக்கமும் பறிப்போனது!

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்து அதிர்ச்சியை தந்துள்ளது.

உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி! வெண்கலப் பதக்கமும் பறிப்போனது!

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் 12-வது ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா இழந்தது. இந்நிலையில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டி நேற்று கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே தடுமாறி வந்த இந்திய அணி இரண்டாம் பாதியில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து பிரான்ஸ் வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிகழ்வு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய அர்ஜெண்டினா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

From around the web