ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து!

 
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய  நியூசிலாந்து!

டெஸ்ட் போட்டிகளை பொறுத்து ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டிரா செய்த நியூசிலாந்து அணி, பர்மிங்காமில் நடந்த 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது
இதனையடுத்து நியூசிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இது வரை இந்திய அணி முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது இதனால் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4வது இடத்தையும், பாகிஸ்தான் அணி 94 புள்ளிகளுடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

மற்ற நாடுகளை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் 84 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்கா 80 புள்ளிகளையும், இலங்கை 78 புள்ளிகளையும், வங்காளதேசம் 46 புள்ளிகளையும் ஜிம்பாப்வே 35 புள்ளிகளையும் பிடித்து 6 முதல் 10 ம் இடங்களில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web