உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: இறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வி!
Sun, 5 Dec 2021

உலக இறுதி சுற்று பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்த நிலையில், வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் டாப் 8 இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு உலக இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், தென்கொரியாவின் அன் சி யங்கும் மோதினர்.
இந்த போட்டியில் 21-16, 21-12 என்ற செட் கணக்கில் அன் சி யங் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் பாலியில் தொடர்ந்து மூன்று முறை பட்டம் வென்ற சாதனையைப் படைத்துள்ளார். இறுதிச் சுற்றில் தோல்வியை தழுவிய பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
From around the web