அதிர்ச்சி! ஒலிம்பிக் போட்டி வீர‌ர்களுக்கு கொரோனா ! போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா?

 
அதிர்ச்சி! ஒலிம்பிக் போட்டி வீர‌ர்களுக்கு கொரோனா ! போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா?

உலகம் முழுவதையும் ஒன்றரை ஆண்டுகளாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா காரணமாக சென்ற ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் நடப்பாண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டித் தொடர்கள் ஜப்பானின் டோக்கியோவில் 5 நாட்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதிர்ச்சி! ஒலிம்பிக் போட்டி வீர‌ர்களுக்கு கொரோனா ! போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா?


போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப் பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடதப்பட்டது. இதில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.

அதிர்ச்சி! ஒலிம்பிக் போட்டி வீர‌ர்களுக்கு கொரோனா ! போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா?

இதனையடுத்து முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா ஊடுருவி இருப்பது பரபரப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் எந்த நாட்டு வீரர்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. வீரர்கள் இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web