டோக்கியோ ஒலிம்பிக்: இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

 
டோக்கியோ ஒலிம்பிக்: இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

துப்பாக்கி சுடுதல்

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று: சவுரப் சவுத்ரி-மானு பாகெர், அபிஷேக் வர்மா-யஷாஸ்வினி தேஸ்வால், அதிகாலை 5.30 மணி, இறுதி சுற்று: காலை 8.07 மணி.

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்று: திவ்யான்ஷ் சிங் பன்வார்-இளவேனில், தீபக்குமார்-அஞ்சும் மோட்ஜில், காலை 9.45 மணி, இறுதி சுற்று: பகல் 12.22 மணி.

ஆக்கி

இந்தியா-ஸ்பெயின் (ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம்), காலை 6.30 மணி.

பேட்மிண்டன்

ஆண்கள் இரட்டையர் பிரிவு லீக் சுற்றில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி-பென் லான்-சீன் வென்டி (இங்கிலாந்து), காலை 8.30 மணி.

டேபிள் டென்னிஸ்

ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் சரத்கமல்-மா லாங் (சீனா), காலை 8.30 மணி.

பாய்மர படகு

பெண்களுக்கான லேசர் ரேடியல் தகுதி சுற்று: நேத்ரா குமணன், காலை 8.35 மணி முதல்.

ஆண்களுக்கான லேசர் ஸ்டான்டர்டு தகுதி சுற்று: விஷ்ணு சரவணன், காலை 8.45 மணி முதல்.

ஆண்களுக்கான ஸ்கிப் 49 இஆர் தகுதி சுற்று: கணபதி-வருண் தக்கர், காலை 11.20 மணி முதல்.

குத்துச்சண்டை

பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் முதலாவது சுற்றில் லவ்லினா போர்கோஹைன்-நாடின் அபெட்ஸ் (ஜெர்மனி), காலை 10.57 மணி

From around the web