டோக்கியோ ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
Manika Batra

இந்நிலையில் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

முன்னதாக டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் டின்-டின் ஹோவை எதிர்கொண்டார். முதல் நான்கு செட்டையும் 11-7, 11-6, 12-10, 11-9 என கைப்பற்றி கிரேட் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் மற்றோரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி, சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுவை 4-3 என்ற செட் கணக்கில் (11-5, 9-11, 13-11, 11-9, 3-11, 9-11, 5-11) வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

From around the web