டோக்கியோ பாராலிம்பிக்: 19 பதக்கங்கள் குவித்து இந்திய வரலாற்று சாதனை!

 
டோக்கியோ பாராலிம்பிக்: 19 பதக்கங்கள் குவித்து இந்திய வரலாற்று சாதனை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

1968 முதல் 2016 வரைக்கும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் முடிவடைந்து உள்ள நிலையில் நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெங்கலம் உள்பட 19 பதக்கங்களை வென்று குவித்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெக்காராவும், சிங்ராஜ் அதானாவும் இரட்டை பதக்கங்களை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

From around the web