இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஓபிஎஸ் குஜராத் பயணம்.. பதற்றத்தில் ஈபிஎஸ் !

 
d

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு காலையில் புறப்பட்டுள்ளார். 

அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்கின்றனர். மேலும், குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ops

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் அவர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எனினும் அவை தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. அல்லது சந்திப்புகள் ரகசியமாக இருக்குமா என்றும் கூறப்படுகிறது.

ஒரு நாள் பயணமாக செல்லும் பன்னீர்செல்வம் இன்று இரவே சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின்போது அரசியல் ரீதியான சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக மற்றொரு தரப்பில்  தகவல்  வெளியாகியுள்ளது.

From around the web