BREAKING! பொதுஇடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் !

 
BREAKING! பொதுஇடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் !

தமிழகத்தில் கொரோனாவால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூலை 19ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இந்த கூடுதல் தளர்வுகள் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்:
கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையில் தேவையான இடைவெளி இவற்றை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு
தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் திறக்க தடை
புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தடை
தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்கள் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி
பள்ளி கல்லூரிகள் திறப்புக்கு தடை
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை
திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் இறுதி சடங்குகளில் 20 பேர்கள் மட்டுமே அனுமதி
மதுக்கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்களுக்கும் தொடர்ந்து தடை

From around the web