தமிழகத்தில் இந்த இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
தமிழகத்தில் இந்த இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஷா, சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும்.

தென்மேற்கு பருவ கற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, சேலம், திருவள்ளுர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இந்த இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web