நான் பேசமாட்டேன்…. ஆனால்..? பஞ்ச் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

 
நான் பேசமாட்டேன்…. ஆனால்..? பஞ்ச் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது ரூ.441.76 கோடி மதிப்பில் 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவருக்குமான அரசாக பாரப்பட்சமின்றி சேவை செய்து வருகிறோம். நான் எப்போது அதிகம் பேசமாட்டேன், செயலில் தான் எனது பணி இருக்கும். தலைச்சிறந்த மாவட்டமாக கோவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் பேசமாட்டேன்…. ஆனால்..? பஞ்ச் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலையை விரிவாக பணிகளுக்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் குடிநீர் பிரச்னை தலைதூக்காமல் இருக்கும் பொருட்டு சீரான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கோவையில் எந்தவித திட்ட சாலை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் மீண்டும் திட்ட சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும். மத்திய சிறைச்சாலை புறநகர் பகுதிக்கு கொண்டுசெல்லப்படும்.

நான் பேசமாட்டேன்…. ஆனால்..? பஞ்ச் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

உங்கள் தொகுதியில் முதல்வர் மூலம் பல்வேறு மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத மனுக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கோவை நிகழ்ச்சியில் பேசினார்.

From around the web