இன்று 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

 
இன்று 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தொடர் மழை காரணமாக மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூர்களுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

அதேபோல திருவாரூர், ராமநாதபுரம், மதுரை, சிவங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழைப் பொழிவு அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் சில மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web