ரேஷன் கடைகளில் ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி !

 
ரேஷன் கடைகளில் ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி !

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ஜுன் மாதம் ரூ 2000/- ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அத்துடன் மத்திய அரசு தீபாவளி வரை ரேஷன் கடைகளில் பொருட்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 2.09 கோடி அரிசி ரேஷன்கார்டு உள்ளது. அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 35 கிலோவும், 93 லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு நபர் ஒருவருக்கு தலா 5 கிலோவும், முன்னுரிமையற்ற ரேஷன்கார்டுதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகளில் ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி !

ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம்.மேலும் கொரோனாவால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் அரிசி !


இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, மற்ற கார்டுகளை உடையவர்களுக்கு கூடுதல் அரிசி வழங்கி வருகிறது.எனவே, மத்திய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து, ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜூன் மாதத்தில் மொத்தமாக பொருட்கள் விநியோகிக்கப்படும் எனவும், இது குறித்த அனைத்து தகவல்களும் ரேஷன் கடைகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web