போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட வேண்டும்! கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 
போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட வேண்டும்! கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதில் மாவட்ட கலெக்டர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி

போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட வேண்டும்! கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!
  • தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
  • உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் வழங்க வேண்டும்
  • குறிப்பிட்ட காலத்திற்குள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
  • உணவு பொருட்கள் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
  • ஏழு இலக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
  • நகர்ப்புற, ஊரகப் பகுதி காலிப் பணியிடங்களை உடனடியாக தகுதியான நபர்கள் கொண்டு நிரப்ப வேண்டும்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் கிடைக்குமாறு ஆட்சியர்கள் பணியாற்ற வேண்டும்

கலெக்டர்கள் அவர்களுக்குரிய அதிகாரத்தை சரியான முறையில் செயல்படுத்தி மக்கள் நலத்திட்டங்கள் விரைந்து மக்களை சென்றடைந்திட ஆவண செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்

From around the web