பிரபல கன்னட நடிகர் ராஜேஷ் காலமானார்!!
நடிகர் அர்ஜுனின் மாமனாரும் பிரபல கன்னட நடிகருமான ராஜேஷ் இன்று உடல்நலக்குறைவு காலமாக உயிரிழந்தார். அவர் 1935, ஏப்ரல் 15ல் பிறந்தவர். இவரின் நிஜப் பெர்ய மூனி சௌதப்பா. இவர் சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து வந்தார். நாடக சபையில் அவரது பெயர் வித்யா சாகர் . சிறிது காலத்திற்கு பிறகு ஷக்தி நாடக மண்டலி நாடக சபையை சொந்தமாக உருவாக்கினார்..

இதனையடுத்து ' வீரா சங்கல்ப' என்ற கன்னட படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். 1968 ல் வெளியான நம்ம உரு படத்திற்கு பிறகு தம்முடைய பெயரை வித்யா சாகர் என்ற பெயரை ராஜேஷ் என மாற்றிக்கொண்டார். கபூ பெல்லுபு, யெராடு முகா, புன்ய புருஷா, கனிகே, பிருந்தாவனா, சுக சம்சாரா, தேவர மக்கலு, பூர்ணிமா, நம்ம படுகு, பலே பாஸ்கரா, ஹென்னு ஹொன்னு மன்னு, விஷ கன்யே, க்ராந்தி வீரா, வசந்த நிலையா என பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தற்போது வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனையால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார் 2 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது உடல் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இல்லத்திலேயே இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. நடிகர் ராஜேஷின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரலங்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரின் மகளான ஆஷா ராணி தான்பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனை திருமணம் செய்து கொண்டார்.
