ஊக்கத்தொகை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு!!..

 
ஊக்கத்தொகை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு!!..

முழுநேர முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்க தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சரவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1,200-லிருந்து 1,600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டது.

ஊக்கத்தொகை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு!!..

இத்திட்டத்திற்க்கென, 2021-22ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் ரூ. 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21ஆம் ஆண்டு முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தில் 1,124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

From around the web