இன்று முதல் கோயம்பேடு சந்தையில் விற்பனை! தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது!

இன்று முதல் கோயம்பேடு சந்தையில் விற்பனை! தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது!

தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பரவல், தற்போது படிபடியாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், தளர்வுகளற்ற ஊரடங்கில் சிறிது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் கோயம்பேடு சந்தையில் விற்பனை! தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது!

இதனையடுத்து காய்கறி வியாபாரிகள் மீண்டும் விற்பனை செய்யஉள்ளதால் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வியாபாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இன்று முதல் கோயம்பேடு சந்தையில் விற்பனை! தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது!

சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் உட்பட 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.

From around the web