முதலீட்டாளர்கள் மாநாடு- ரூ.34,732 கோடி மதீப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

 
முதலீட்டாளர்கள் மாநாடு- ரூ.34,732 கோடி மதீப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியாவில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு என்கிற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இம்மாநாட்டின் முதல்வர் முன்னிலையில் ரூ.34,732 மதீப்பீட்டிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்ட்ரா டெக் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி ஆலைகள் கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டையில் அமைக்கின்றன. அதேபோல டால்மியா நிறுவனத்தின் சிமென்ட் அரைத்தல் ஆலை கோவை, செங்கல்பட்டு, விருதுநகர் மாவட்டங்களில் அமையவுள்ளன.

முதலீட்டாளர்கள் மாநாடு- ரூ.34,732 கோடி மதீப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

அதை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் புதியதாக மின் வாகன உற்பத்தி ஆலையை டிவிஎஸ் மோடார் நிறுவனம் அமைக்கிறது.மேலும் இதே நிகழ்வில் பணிகள் முடிவடைந்த 10 நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் துவங்கிவைத்தார். ரூ. 3,928 கோடி மதிப்பில் துவங்கப்பட்டுள்ள இந்நிறுவனங்கள் மூலம் 3,944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர மாநாட்டில் 13 புதிய நிறுவனங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டன. ரூ. 13,500 கோடி மதிப்பிலான இந்நிறுவனங்கள் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் மாநாடு- ரூ.34,732 கோடி மதீப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

ரூ. 485 கோடி மதிப்பீட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் கையெழுத்தானது. இந்நிகழ்வில் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேட்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

From around the web