முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒலிம்பிக் பாடல்!!

 
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒலிம்பிக் பாடல்!!

டோக்கியோவில் நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழக வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“வென்று வா வீரர்களே” என்ற வரியைக் கொண்ட அந்தப் பாடல், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துகளுடன் நிறைவு பெறுகிறது.

From around the web