அதிரடி உத்தரவு! அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்!

 
அதிரடி உத்தரவு! அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிரடி உத்தரவு! அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்!


அந்த செய்திக்குறிப்பில் அனைத்து வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் எனவும், பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன் பிற ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வர வேண்டும்.

அதிரடி உத்தரவு! அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்!

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்த பிறகு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும். அத்துடன் நடப்பாண்டில் செய்யப்படும் மாணவர்கள் சேர்க்கை குறித்த தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்’’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web