மக்களே உஷார்! தமிழகத்தில் கொரோனா 3வது அலை!

 
மக்களே உஷார்! தமிழகத்தில் கொரோனா 3வது அலை!


தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் முகக்கவசம், சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள் இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா 3 வது அலை குறித்து செய்திக்குறிப்புஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் என்பது மக்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்! தமிழகத்தில் கொரோனா 3வது அலை!

இதன் மூலம் மூன்றாவது அலை பரவுவதற்கு மக்கள் வழிவகுத்துவிடக்கூடாது.
மேலும், கொரோனா அபாயம் நீங்கி விட்டதாகவும் கருதக்கூடாது. 3வது அலை கண்டிப்பாக வரும் என்றே ஐ.சி.எம்.ஆர். மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். பல வெளிநாடுகளில் 3வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நம்மையும் 3வது அலை தாக்கினால் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும்.
வராமல் தடுப்பதற்கு அறிவியல் பூர்வமாக கண்டுபிடிப்புகள் இல்லாவிட்டாலும் கூட நம்மால் முடியும். அது பொதுமக்கள் கைகளில்தான் இருக்கிறது.

கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். முக்கியமாக கூட்டமாக சேருவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தை இதுவரை 1.80 கோடி பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.

மக்களே உஷார்! தமிழகத்தில் கொரோனா 3வது அலை!

தினமும் 7 லட்சம் வீதம் மாதம் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது. ஆனால் தினமும் 4 முதல் 5 லட்சம் தடுப்பூசிகள்தான் கிடைக்கிறது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விழிப்புணர்வு அதிகம். மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகிறார்கள். 10 கோடி தடுப்பூசியை விரைவாக தந்தால் 4 முதல் 5 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நிர்வாகம் தயாராக இருக்கிறது, எனத் தெரிவித்துள்ளார்.

From around the web