கன்னியாகுமரியில் தொடர் மழையால் உடைந்த குளங்கள் !970 வீடுகள் சேதம்!மின்கம்பங்கள் சரிவு!

 
கன்னியாகுமரியில் தொடர் மழையால் உடைந்த குளங்கள் !970 வீடுகள் சேதம்!மின்கம்பங்கள் சரிவு!

யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வாய்க்கால்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ச்சலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் தொடர் மழையால் உடைந்த குளங்கள் !970 வீடுகள் சேதம்!மின்கம்பங்கள் சரிவு!

குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கீழ் மொத்தம் 2,040 குளங்கள் உள்ளன. சென்ற ஆண்டில் தொடர் மழையினால் 1850 குளங்கள் நிரம்பியுள்ளன. 25க்கும் மேற்பட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீடித்து வரும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாய நிலை உருவாகியுள்ளது.

கன்னியாகுமரியில் தொடர் மழையால் உடைந்த குளங்கள் !970 வீடுகள் சேதம்!மின்கம்பங்கள் சரிவு!

தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட கனக மூலம் குடியிருப்பு பகுதியில் புலியூர்குறிச்சி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, கரை பகுதி அந்தரத்தில் தொங்கியநிலையில் உள்ளது. இதிலிருந்து . வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள தோட்டங்களில் பாய்ந்தபடி, நாஞ்சில் புத்தனார் கால்வாயில் சென்று சேருகிறது.மேலும் தாழக்குடி பகுதியில் உள்ள பெரியகுளமான வீர கேரள அப்ப மேரி குளத்தின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னந்தோப்புகள், வாழை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.

கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நெல் வயல்களில் ஏர் உழுது சமன்படுத்திய வயல்களில் எல்லாம் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. நடவுக்காக தயார் செய்யப்பட்டிருந்த நெல் நாற்றுகளையும் மழை வெள்ளம் மூழ்கியபடி நிற்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து பயிர் சாகுபடி விவசாயிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் தொடர் மழையால் உடைந்த குளங்கள் !970 வீடுகள் சேதம்!மின்கம்பங்கள் சரிவு!

இதனால் குமரியில் 970 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள், மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அங்குள்ள மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோவாளை தாலுகாவில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது இந்த பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 8 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து உள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால், வீடுகளைச் சேர்ந்த மக்கள் சுமார் 350 பேர் தற்காலிக 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, படுக்கை வசதிகள் கழிப்பறை வசதிகள், முகக் கவசம் மற்றும் சானிடைசர் வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்பட்டு வருவதாக மீட்புக்குழுக்களும் , சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளது.

From around the web