பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளை காட்டிக்கொடுத்தால் வெகுமதி..!

 
பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளை காட்டிக்கொடுத்தால் வெகுமதி..!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்துக்கட்டுவதற்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொண்டுவந்துள்ள நல்லண்ண நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும் உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் அரசால் கவனம் செலுத்த முடியாமல் போனது.

பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளை காட்டிக்கொடுத்தால் வெகுமதி..!

தற்போது தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று முதல்வராக ஸ்டாலின் பதிவேற்றியுள்ளார். இந்நிலையில் தற்போதைய அரசும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. முதற்கட்டமாக பிளாஸ்டிக் உற்பத்தியை தடுக்கும் பொருட்டு நூதன நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் ஆலைகள் குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு தக்க வெகுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளை காட்டிக்கொடுத்தால் வெகுமதி..!

இதுகுறித்த புகாரை மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், புகார் கொடுப்பவர் பற்றிய ரகசியங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் (https://tnpcb.gov.in/contact.php) பொதுமக்கள் தங்களுடைய புகாரினை மின்னஞ்சல் / கடிதம் / தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web