மலைக்கோவில்களில் ரோப் கார்!! தமிழக அரசு அதிரடி!!

 
மலைக்கோவில்களில் ரோப் கார்!! தமிழக அரசு அதிரடி!!


தமிழக அரசு துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது மலைக்கோவில்களில் ரோப்கார் வசதியை ஏற்படுத்த ஆலோசித்து வருகிறது.
அதன்படி திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுகுன்றம் கோவில்களில் ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மலைக்கோவில்களில் ரோப் கார்!! தமிழக அரசு அதிரடி!!


தமிழகத்தில் 33 மலைக்கோயில்களில் கேபிள் ரோப் கார் . அதற்கான ஆதாரங்கள், நிதி நிலைத்தன்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் , தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்த விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த பொதுநல வழக்கில் நடைபெற்ற விசாரணையில் சோளிங்கா் மற்றும் அய்யா்மலையில் கேபிள் ரோப் கார் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மலைக்கோவில்களில் ரோப் கார்!! தமிழக அரசு அதிரடி!!


மேலும் திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீா்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web