‘டாஸ்மாக்’ கடைகள் திறப்பு! இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

 
‘டாஸ்மாக்’ கடைகள் திறப்பு! இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.ஆந்திரா, கர்நாடகா , புதுச்சேரியிலும் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன


ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் பதுக்கி கொண்டு வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சாராயம் காய்ச்சும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களை பார்த்து வீட்டிலேயே மது தயாரித்து சிக்கலில் சிக்குவோர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘டாஸ்மாக்’ கடைகள் திறப்பு! இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!


இதற்கிடையில் மதுக்கடைகளை திறந்து மதுபாட்டில்களை கைப்பற்றி கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது

தற்போது தமிழகத்தில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு 14ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் மதுக்கடைகளை திறப்பது குறித்து ‘டாஸ்மாக்’ நிர்வாகம் தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. அப்படி ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் மதுபாட்டில்கள் விலையையும் குறிப்பிட்ட அளவு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய முடிவு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web