கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவிய பொதுமக்களுக்கு நன்றி!! முதலமைச்சர் முக ஸ்டாலின்!

 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவிய பொதுமக்களுக்கு நன்றி!! முதலமைச்சர் முக ஸ்டாலின்!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டாவது அலையில் லட்சக்கணக்கில் பாதிப்புக்களும், உயிரிழப்புகளும் மக்களை வெகுவாக பாதித்துள்ளன. இதிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.


தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கொரோனா தொற்று அதிகரித்த போது இது 50 ஆயிரத்தை தொடும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டு 15000க்கும் குறைவான நிலையை அடைந்துள்ளது
அரசின் தீவிர நடவடிக்கைகளால் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டன.

படுக்கைகள் இல்லாமல் யாரும் இல்லை என்ற நிலை தற்போது எட்டப்பட்டுள்ளது. கொரோனா கட்டளை மையத்திற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற நிலையை விரைவில் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்த மக்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

From around the web