இன்று முதல் முன்பதிவு துவக்கம்!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

இன்று முதல் முன்பதிவு துவக்கம்!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

இன்று முதல் டிசம்பர் மாத தரிசனத்திற்கும், தங்கும் விடுதிக்கும் முன்பதிவு துவக்கம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டண டோக்கன் பெறலாம். அல்லது இலவச தரிசனம் பெறுபவர்களுக்கும் நேர தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் முன்பதிவு துவக்கம்!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன அனுமதி அட்டை நவம்பர் 27 இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் திருமலையில் தங்குவதற்கான அறைகள் நாளை நவம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இன்று முதல் முன்பதிவு துவக்கம்!! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

இலவச தரிசன டோக்கன், மற்றும் தங்குவதற்கான அறைகளை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

From around the web