மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

 
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சென்னையில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!


கடந்த சில நாட்களுக்கு முன்னர், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயாக இருந்தது. தற்போது மீண்டும் நூறு ரூபாயை விட அதிகரித்துள்ளது.
தொடர்கனமழை காரணமாக தக்காளியின் வரத்து, குறைந்துள்ளது. .100 லாரிகளில் சென்னைக்கு தக்காளி தேவை உள்ள நிலையில் தற்போது 45 லாரிகள் மட்டுமே தக்காளி வரத்து இருக்கிறது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

இதனால் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர் .
தக்காளியுடன் சேர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கி. முருங்கைக்காய் ரூ 250க்கும், 1கி. கத்திரிக்காய் ரூ 100 க்கும், வெண்டைக்காய் கி. 80 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தை மாதம் பிறந்த பிறகு காய்கறிகளின் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

From around the web