தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

 
தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக படிப்படியாக கொரோனா குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.சிறு கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியதால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

ஆனாலும் பூங்கா, உடற்பயிற்சி கூடம், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பஸ், மின்சார, மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்துக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தொழில் வளர்ச்சியை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

பொது போக்குவரத்தை தொடங்கினால் நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விடுத்த செய்திக்குறிப்பில் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பஸ்களை இயக்க தயார் நிலையில் இருக்கிறோம்.

சென்னையில் 255 மாநகர பஸ்கள் முன்களப் பணியாளர்களுக்காக இயக்கப்படுகிறது என்றனர். அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக மின்சார ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
மாநில அரசு அறிவித்தால் மின்சார ரயில் சேவை தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.தளர்வுகள் அறிவிப்பில் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web