பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 
பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கல்வி வரலாற்றில் இல்லாத அளவு 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. சில நாட்களுக்கு முன் +2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிட்டது.

பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்நிலையில் பொறியியல் படிப்பில் பி.இ, பி.டெக் ஆகியப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்லைனில் http://tneaonline.org & http://tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் செப்டம்பர் 4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 25ல் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4 வரை கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

From around the web