உஷார்!! 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! 5 நாட்களுக்கு மிக கனமழை!!

 
இடி மின்னல் மழை

 தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியாவின் வட  மாநிலங்களில் தொடர்ந்து   கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா   மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.   இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக   இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழை தொடரும். ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில்  நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உ.பி கன மழை

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் காரணமாக   இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பி தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web