நாளை உலகின் மிக நீண்ட பகல் பொழுது! சூரிய நமஸ்காரமும் யோகாவும் இவ்வளவு முக்கியமா? வானிலை மாற்றங்கள்!

 
சர்வதேச யோகா தினம்

ஆதி மனிதன் சூரியனைத் தான் முதல் கடவுளாக வழிபட்டு வந்தான். இயற்கை தானே கண்களுக்குத் தெரிந்த கடவுள். அதன் பின்னர் நெருப்பு, காற்று, நீர் என பஞ்சப்பூதங்களை வழிபட துவங்கினான். ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். ஆமாம்.. உலகின் மிக நீண்ட பகல் பொழுது நாளை ஜூன் 21ம் தேதி நீடிக்கிறது.

அதாவது நாளை அதிகாலையில் சூரியன் மிக விரைவாகவே உதயமாகி விடும். அதே போல், வழக்கத்தை விட மிக தாமதமாகவே மாலையில் சூரியன் அஸ்தமிக்கும். இந்த நாளை  சம்மர் ஸால்ஸ்டிஸ் என அழைக்கின்றனர்.

சர்வதேச யோகா தினம்

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினம் என உலகம் முழுவதும் 175 நாடுகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். வருடத்தில் மாதப்பிறப்பு, அறுவடைத் திருநாள் என ஒவ்வொரு சிறப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதை போலவே வரலாற்று அடிப்படையில்  ஜூன் 21 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த நாளில் தான்  பல உலக நாடுகளில்  பருவ மாற்றத்தில், க்ளைமேட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் சம்மர் ஸால்ஸ்டிஸ் அதாவது ‘சூரியன் மறையவில்லை’ என்பதை குறிக்கும் வகையில் சிறப்பு பெறுகிறது. இந்த தினத்தில்  பகல் பொழுது நீளமாகவும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும்.  இந்த அதிசயம்  இயற்கையாகவே அமைந்துள்ளது.

சர்வதேச யோகா தினம்

இதன் அடிப்படையில்தான் வடக்கு ஹெமிஸ்பியர் பகுதிகளில் கோடைக் காலமும், தெற்கு ஹெமிஸ்பியர் பகுதிகளில் மழைக்காலமும் தொடங்குகிறது. யோகக் கலையில் பலவிதமான பயிற்சிகள் உள்ளன. அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவையே. அதிலும் மிக குறிப்பிடத்தக்கது சூரிய நமஸ்காரம்.

அதிகாலையில் சூரிய உதய நேரத்தில் 12 விதமான ஆசனங்களை ஒரே சுழற்சியில் செய்வது தான் சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்காரம் செய்யும் பொழுது அதிகாலை நேரத்தில் நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  தூய்மையான காற்று, யோகா ஆசனங்களை ஒரு சீராக செய்யும் பொழுது நாம் விடும் மூச்சு காற்றின் ரிதம் ஆகிய அனைத்துமே உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் நீண்ட ஆயுளும் அமையப் பெறலாம் என்பது அனுபவஸ்தர்களின் வாக்கு. உலகம் முழுவதும் அமைந்துள்ள  175 நாடுகள் சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web