ஆஸ்கர் விருது வழங்கும் விழா இடம், தேதி அறிவிப்பு!

 
ஆஸ்கர் விருது வழங்கும் விழா இடம், தேதி அறிவிப்பு!


உலகிலேயே திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள். இந்த ஆஸ்கர் விருதுகள் உலக அளவில் திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கும் விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா இடம், தேதி அறிவிப்பு!
Alexandria, Egypt – September 12, 2014 – Wedding Bridesmaids Competition, reward for Best Bridesmaids for participation in competitions. Prize for victory; Shutterstock ID 1178502259; Purchase Order: FIX0005828 ; Project: Tentpoles; Client/Licensee: encyclopedia britannica


இந்த ஆண்டு உலகம் முழுவதும், அதிதிவீரமாக பரவி வரும் கொரோனா காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா எளிமையாக நடத்தப்பட்டது.இந்நிலையில், 2022ம் ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா காரணமாக ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27ம் தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாஅ ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடத்தப்படும் என ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

From around the web