அரபிக்கடலில் ரூ.3,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு - 5 பாகிஸ்தானியர்கள் கைது!

 
போதை கடலில் கடத்தல் கைது பாகிஸ்தானியர்

அரபிக்கடலில் கடத்த முயன்ற பல ஆயிரம் கோடி மதிப்பிலான உயர்தர போதைப்பொருட்களை இந்தியக் கடலோரக் காவல் படையினரும் குஜராத் காவல்துறையினரும் இணைந்து அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியின் ஒரு பகுதியாக, குஜராத் பயங்கரவாத ஒழிப்புப் படையினரும் இந்தியக் கடலோரக் காவல் படையினரும் இணைந்து தீவிரக் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

லட்சத்தீவு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை வழிமறித்துச் சோதனையிட்டதில், அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 526 கிலோ எடை கொண்ட மெத்தம்படமைன் மற்றும் ஹெராயின் உள்ளிட்ட உயர்தரப் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.3,000 கோடி ஆகும். இச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பாகிஸ்தானியர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர், படகு மற்றும் போதைப்பொருட்களுடன் அவர்களைப் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.