கொட்டும் பனியில் உறைந்து 70 பேர் பரிதாப பலி !

 
fhfgh

அண்மைக்காலமாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நிலவிய கடும் பனிப்பொழிவால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அமெரிக்காவில் பனியால் மூடப்பட்ட காரில் சிக்கி சிலர் உயிரிழந்த சோகமும் நடந்தது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு உள்ளது. குறிப்பாக தலைநகர் காபூல் உள்ளிட்ட நகரங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்துள்ளது.கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 33 டிகிரியாக உள்ளது.
அப்பகுதிகளில் கண்களால் எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக கொட்டிக்கிடக்கிறது.snow

இந்த உறைபனியில் உறைந்து 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தைகள், பெண்கள் உள்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பனிப்பொழிவால் கடந்த 8 நாட்களில் மட்டும் 70 ஆயிரம் கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. தொடர்ந்து பனிப்பொழிவு காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

snow

இதுகுறித்து ஆப்கான் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இந்த ஆண்டு குளிர்காலம் மிகவும் குளிர்ச்சியானது. இந்த குளிர் அலை மேலும் 1 வாரம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web