ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!! 31 பேர் பலி!! வைரலாகும் வீடியோ !!

 
ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!! 31 பேர் பலி!! வைரலாகும் வீடியோ !!

கென்யாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே முடங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இந்நிலையில் நைரோபியில் இருந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பாடல் குழு ஒன்று பேருந்தில் சென்றுள்ளது. வழியில் உள்ள என்.சி.யு. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் பேருந்து ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்துசெல்ல முற்பட்டது. பேருந்து முழுவதுமாக எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் கவிழ்ந்தது.


இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 31 பேர் வெள்ளத்தில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழு 12 பேரை உயிருடன் காப்பாற்றியுள்ளது. திருமணத்திற்கு சென்று உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web